அருண்விஜய்-ஹரி படத்திற்காக ஒன்றிணைந்த மாஸ் தொழில்நுட்ப கூட்டணி


நடிகர் அருண்விஜய்யும் இயக்குனர் ஹரியும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கான காலம் இப்போதுதான் கனிந்து வந்துள்ளது. அந்தவகையில் அருண்விஜய்யின் 33வது படமாகவும் ஹரியின் 16வது படமாகவும் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ராதிகா, இமான் அண்ணாச்சி என இந்தப்படத்தின் நட்சத்திரப்பட்டியல் அவ்வப்போது வெளியாகி வந்தது.

இந்தநிலையில் இந்தப்படத்தில் ஹரியுடன் ஹைகொர்க்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, எடிட்டர் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சக்தி வேண்டராஜ் கலை வண்ணத்தை கையாள, சண்டைக்காட்சிகளை அனல் அரசு வடிவமைக்கிறார்.