நட்சத்திர கூட்டத்தால் ‘செக்க சிவந்த வானம்’..!

chekka chivantha vaanam tamil

மல்டி ஹீரோ கதைகளை கையாள்வதில் இயக்குனர் மணிரத்னத்திற்கு நிகர் அவரே தான்.. அந்த வகையில் தற்போது அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவருகிறார். தற்போது இந்தப்படத்திற்கு செக்க சிவந்த வானம் என கலர்புல் டைட்டிலையும் சூட்டியுள்ளார்.

ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆரம்பித்த சமயத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்கமுடியாமல் போகவே, அந்த இடத்திற்கு இப்போது அருண்விஜய்யை அழைத்து வந்துள்ளார் மணிரத்னம்.