ஒரே நேரத்தில் 4 டீசர்கள் ; ‘கிக்’ டீம் அசத்தல்…!

kik-1

நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் இயக்குனர் எம்.ராஜேஷின் ஆறாவது படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. சுருக்கமாக ‘கிக்’.. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியும், ஆனந்தியும் இதில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்..

ராஜேஷின் ஆஸ்தான நடிகரான சந்தானம் இல்லாத குறை ஒன்றே தவிர மற்றபடி, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன் என காமெடி நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது.. மிக முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

இந்தப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து 25 வருடங்கள் ஆன நிலையில் இது அவரது 19வது தயாரிப்பாகும்.. நேற்று அவரின் பிறந்தநாள் என்பதால் இந்தப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள்.. இந்தப்படத்தில் நடிக்காவிட்டாலும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் சந்தானம்.

டீசர் என்றுதான் பெயர்.. என்றாலும் வெளியிடப்பட்டதோ ஒன்றல்ல.. இரண்டல்ல.. நான்கு டீசர்கள். நான்கையும் பார்த்தாலும் கூட படம் எந்தவிதமான கதைக்களத்தில் நகரும் என கண்டுபிடிக்க முடியாதபடி சாமார்த்தியம் காட்டியுள்ளார் இயக்குனர் எம்.ராஜேஷ். நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.