தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்

kennadi club

சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பிற்கிடையே இவர்கள் நிஜ விளையாட்டிலும் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையையுடன் 12லட்சம் ரூபாய் பரிசை தட்டிசென்றனர்..

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடி குழுவான ‘வெண்ணிலா கபடி குழு’விலிருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்து வருகிறார்கள். இவர்கள் பெரிதாக கருதுவது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத்தான். இந்த கோப்பையின் மதிப்பு ரூ.12,00,000/-.

இப்போட்டி வருடந்தோறும் மாவட்ட வாரியாக நடைபெற்று இறுதிப் போட்டியில் வெல்லும் அணியினருக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ வழங்கப்படும். இவ்வருடம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்துவரும் வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.

இவர்களின் வெற்றி இவர்களுக்கு மட்டுமல்லாது படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுசீந்திரன் இப்படத்தை இயக்க, டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸின் தாய் சரவணன் தயாரிக்கிறார்.