‘கங்காரு’ இப்போ கலைப்‘புலி’ கையில்…!

 

இனிமேல் சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் இயக்குனர் சாமி, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘கங்காரு’.  முகம் சுழிகவைக்கும் சர்ச்சைக்குரிய எந்தவித காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாகவும்   ஒரு அதேசமயம் அழகான காதலை மையப்படுத்தி இளைஞர்கள் ரசிக்கும்படியாகவும் படத்தை  உருவாக்கியுள்ளார் சாமி.

இந்தப்படத்தில் புதுமுகங்கள் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, நீண்ட நாட்களாக நடிப்பைவிட்டு ஒதுங்கியிருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்..

முதல் முறையாக இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

நாகராஜசோழன் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். படம் தயாராகியும் ரிலீஸாவதில் சிக்கலை நீண்ட நாட்களாகவே சந்தித்துக்கொண்டிருந்தது. இப்போது அதற்கு ஒரு விடிவுகாலம் கிடைத்தது என எண்ணும் வகையில், இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.