‘காப்பான்’ ; சூர்யா பட டைட்டில் அறிவிப்பு

kaappaan

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்துக்கு ‘காப்பான்’ என டைட்டில் வைத்து அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்ப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

லண்டனில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 70% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

அதில் ‘மீட்பான்’, ‘காப்பான்’, ‘உயிர்கா’ ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. ‘காப்பான்’ தலைப்புக்கே பலரும் ஆதரவு தெரிவித்ததால், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இம்மாதத்தில் ‘காப்பான்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.