எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த ‘காளி’ ட்ரெய்லர்..!

kaali triler

வணக்கம் சென்னை படத்தை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ படத்தை இயக்கிவருகிறார் கிருத்திகா உதயநிதி. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ், யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம்போலவே விஜய் ஆண்டனி படங்களை ஆவலுடன் எதிர்பார்க்க தூண்டும் வகையிலேயே இந்தப்படத்தின் ட்ரெய்லரும் சில விறுவிறுப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

இந்தப்படத்திலும் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. ஆக்சன், த்ரில் இரண்டுக்குமே குறைவிருக்காது என்பதும் புலப்படுகிறது. மார்ச்-3௦ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது திரையுலகில் ஸ்ட்ரைக் நடப்பதால் அதன் முடிவை பொறுத்து ரிலீஸ் தேதி மாறும் என்றே தெரிகிறது.