இங்கே இலவச நீதி கிடைக்கிறதா..? சாட்டை சொடுக்கும் ‘வாய்மை’..!

கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடித்திருக்கும் படம் என்கிற ஒரு விஷயம் மட்டுமே போதும் ‘வாய்மை’ படத்தின் பப்ப்ளிசிட்டிக்கும், ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வருவதற்கும்.. அதை சரியாக பயன்படுத்தி இருக்கும் இயக்குனர் செந்தில்குமார் ‘வாய்மை’ படத்தை முடித்து அதன் இசைவெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்துவிட்டார்.

வழக்கம்போலவே இசைவெளியீட்டு விழாவில் கவுண்டமணி கலந்துகொள்ளவில்லை.. அது அவரது வழக்கமாக இருந்தாலும் நேற்று அவர், தான் நடித்துவரும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இங்கே எல்லோருக்கும் இலவசமாக, அரிசி, டிவி, மிக்ஸி கிடைக்கிறது.. ஆனால் எல்லோருக்கும் இலவசமாக நீதி கிடைக்கிறதா என்கிற சாட்டையடி கேள்வியை படத்தில் முன்வைத்திருக்கிறார்களாம். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸை குளித்துக்கொண்டு இருக்கும்போது யோசித்து கண்டுபிடித்தாராம் இயக்குனர் செந்தில்குமார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சாந்தனுவுக்கு இந்தப்படம் மிக முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. மனோஜ் கே.பாரதி, பிருத்வி, பாக்யராஜ், பூர்ணிமா, ராம்கி, தியாகராஜன், ஊர்வசி, தாமிரபரணி பானு என பதினான்கு முக்கிய கேரக்டர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்.