ஜுன்-11 கமல்-கார்த்தி படங்களுக்கு சிறப்பு நாள்..!

கமல் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் விஸ்வரூபம்.. தடை பல தாண்டி. பல போராட்டங்களை சந்தித்து தான் அந்தப்படம் வெளியானது.. ஆனால் அதைவிட மிகுதியான போராட்டங்களை விஸ்வரூபம்-2 சந்தித்து விட்டது.. இதோ அதோ என படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார் கமல்.. அதன் முன்னோட்டமாக இந்தப்படத்தின் ட்ரெய்லரை வரும் ஜூன்-11ஆம் தேதி ஸ்ருதிஹாசன் வெளியிடுகிறார்.

அதே போல பாண்டிராஜ் டைரக்சனில் கார்த்தி தற்போது நடித்துவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.. சாயிஷா சைகால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வரும் ஜூன்-11ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.