குழந்தைகளை கவரும் விதமாக 3டியில் வெளிவரும் ‘ஜம்புலிங்கம்’..!

jumbo-3d-movie

தமிழ்சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் வருவது என்பது ரொம்பவே குறைவு தான்… அப்படி வரும் படங்கள் கூட பெற்றோருக்கும் சேர்த்து அறிவுரை சொல்வதாகத்தான் வருகின்றன.. ஆனால் முழுக்க முழுக்க குழந்தைகளை குஷிப்படுத்துவதற்கென்றே உருவாகியுள்ள படம் தான் ‘ஜம்புலிங்கம்’.. அதுவும் 3டியில் உருவாகியுள்ளது.

‘அம்புலி’, ‘ஆ’ ஆகிய படங்களை இயக்கிய ஹரீஷ்-ஹரி இரட்டை இயக்குனர்கள் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளனர். இந்தப்படம் முழுக்க முழுக்க ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது. மைமிங் புகழ் கோகுல்நாத் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஈரோடு மகேஷ், லொள்ளுசபா ஜீவா உட்பட பலர் நடித்துள்ளனர்.. இந்தப்படத்தை நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிடுகிறார். படம் வரும் மே-13ல் வெளியாகிறது.