மித்ரனின் அடுத்த அதிரடி ‘மிருதன்’..!

 

‘மித்ரன்’ ஆக ‘தனி ஒருவன்’ படத்தில் வெற்றிவாகை சூடிய ஜெயம் ரவி அடுத்து ‘மிருதன்’ ஆக மாற இருக்கிறார். ஆம்.. அவரது அடுத்த படத்தின் டைட்டில் அதுதான். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் குழந்தைகளை கவர்ந்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். என்னை அறிந்தால் படத்தில் கவனம் ஈர்த்த பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கும், இந்தப்படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரிகிறது.