ஹன்ஷிகாவா? பூனம் பஜ்வாவா..? ஜெயம் ரவி திண்டாட்டம்..!

எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த லட்சுமண் என்பவர் இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் தான் ‘ரோமியோ-ஜூலியட்’. 2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி. இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது. டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதில் பூனம் பஜ்வாவும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் ஹன்ஷிகாவுக்கும் பூனம் பஜ்வாவுக்கும் ஜெயம் ரவியுடன் இணைந்து ஒரு போட்டி நடனப்பாடல் மும்பையில் படமாக்கப்படவுள்ளது. ஜெயம் ரவிதான் பாவம்.. இவர்கள் இருவரிடமும் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடப்போகிறாரோ தெரியவில்லை..