எப்பத்தான் நீங்க ‘தல’ படத்துக்கு இசை அமைப்பீர்கள்..?

d imman - ajith 1

16 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் இசையமைப்பாளர் டிஇமான். அறிமுகமே விஜய் படம் என்றாலும் இத்தனை வருடங்களில் இன்னும் அஜித் படத்திற்கு இசையமைக்காதது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இமானுக்கே ஒரு மனக்குறையாக இருந்து வந்தது.

இப்போது அந்த மனக்குறையை தீர்த்து வைத்துள்ளது ‘விசுவாசம்’ படம்.. ஆம். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இமான் கூறும்போது, “பல வருடங்களாக என்னை நோக்கி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, எப்ப நீங்க ‘தல’ படத்துக்கு இசை அமைப்பீர்கள் என்பதுதான். இதோ இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது. தல படத்துக்கு எந்த அளவுக்கு பெஸ்ட் ஆக கொடுக்கமுடியுமோ அந்த அளவுக்கு கொடுப்பேன்” என கூறியுள்ளார்.