சசியின் படத்திற்காக மும்பை சென்று இறங்கிய ஹரிஷ் கல்யாண்


பிக்பாஸ் சீசன்-2 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படம் வெற்றியை கொடுத்து ஒரு கதாநாயகனுக்கான அந்தஸ்தையும் கொடுத்தது. இதையடுத்து இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு என தொடர்ந்து நடித்து, மினிமம் கியாரண்டி நடிகராக வளர்ந்து வருகிறார்.

இந்தநிலையில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுகிறது. இதற்காக தற்போது மும்பை சென்று இறங்கியுள்ளார் ஹரிஷ் கல்யாண். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண்…