காதல் முறிவு ஏற்படுத்தும் குழப்பங்கள் தான் ‘ஹரஹர மஹாதேவகி..!

_MG_6064

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘ஹர ஹர மஹாதேவகி’. இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, “இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில் ‘ஹர ஹர மஹாதேவகி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக் ஒரு நடிகர் என்பதயும் தாண்டி நல்ல மனிதர். என்னுடைய அடுத்த படம் ஹாரர் கலந்த அடல்ட் கதையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.