கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி இணையும் ‘ஹர ஹர மகாதேவகி’..!

harahara-mahadevaki

பரபரப்பாக இயங்கி வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இவர்களது தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ (S3) படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் , ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாகிறது.

இதை தொடர்ந்து ஸ்டுடியோகிரீன் வெளியிடும் உரிமை பெற்ற படமாக ‘ஹர ஹர மகாதேவகி’ என்கிற புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ டைரக்டர் சரவணின் உதவி இயக்குநர் ஆவார். காமெடி கலந்து இப்படத்தின் படபிடிப்பு வருகிற 23தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறும் இப்படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.