ஹேப்பி பர்த்டே ஓவியா..!

‘களவாணி’ மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை களவாடிய கேரளத்து பைங்கிளி தான் ஓவியா. இயல்பான நடிப்பு.. புன்னகை ததும்பும் முகமாக காட்சியளிக்கும் ஓவியா, பிருத்விராஜின் தங்கையாக மலையாளத்தில் ‘கங்காரு’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் தமிழுக்கு வந்தபிறகு மலையாளத்தை விட தமிழில் இவர் நடித்த படங்கள் தான் அதிகம்..

கடந்த வருடம் ‘புலிவால்’ படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய ஓவியாவுக்கு தொடர்ந்து வெளியான ‘யாமிருக்க பயமேன்’, படம் அவரது காமெடி நடிப்பை வெளிக்கொண்டுவந்தது. இந்த வருடம் சரத்குமாருடன் நடித்து வெளியான ‘சண்டமாருதம்’ படத்தில் ஆக்சன் ரோல் பண்ணி அசத்தினார். இன்று பிறந்தநாள் காணும் ஓவியாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது