ஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..!

கடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது. இந்த வருடத்தில் ‘கொம்பன்’ வெற்றியுடன் தனது கணக்கை சிறப்பாகவே துவக்கியுள்ளார்.

ஆனாலும் அதிர்ஷ்டக்காற்று தன் பக்கம் வீசும்போதே அதை சரியான முறையில் பயன்படுத்த தெரியாத நடிகை என்பதற்கு லட்சுமி மேனனைத்தவிர வேறு சிறந்த உதாரணம் சொல்லமுடியாது. காரணம் வருகிற வாய்ப்பையெல்லாம் வளைத்துப்போட்டு நடிக்க, அவர் விரும்புவதே இல்லை… அதுதான் அவரது பலமும் கூட.

தற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிப்பதோடு, அஜித் படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடிக்க இருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் லட்சுமி மேனனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது