ஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..!

 

ரசிகர்களுக்கு கடந்த வருட இறுதியில் சுவையான ‘பிரியாணி’ பரிமாறிய,  கார்த்தி தற்போது நடித்துவரும் புதிய படம் ‘மெட்ராஸ்’.  தனது முதல் படத்தின் மூலம் முத்திரை பதித்த ‘அட்டகத்தி’ ரஞ்சித் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார்.

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் சென்னை புறநகர் மக்களின் புகைபடிந்த வாழ்க்கையை, இளைஞர்களின் காதலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ரஞ்சித், இந்தப்படத்தின் மூலம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை திரையில் காட்ட இருக்கிறார்.

அட்டகத்தி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான், இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் வரும் ஜூன் மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் ஜூன் முதல் வாரத்திலேயே இசைவெளியீட்டு விழாவையும் நடத்திடவிட தீர்மானித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மெட்ராஸ்’ படத்தின் டீஸர் வெளியிடப்படுகிறது என்று செய்திகள் கசிந்தாலும் படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திடம் அப்படி எந்த திட்டமும் இல்லையாம். தனது பிறந்தநாள் அன்று அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட  வழக்கமான நிகழ்ச்சிகளில் மட்டுமே கார்த்தி கலந்துகொள்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்திக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.