கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில் பெருமை சேர்க்கும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ்..!

gokulam chennai rockers

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.

கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையாடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன. பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன.

கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள் என்றார் கோகுலம் குழும தலைவர் கோபாலன்.