கௌதம் கார்த்திக்-கலாபிரவுக்கு திருப்புமுனை தரப்போகும் ‘இந்திரஜித்’..!

indrajith 1

தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு, ‘சக்கரக்கட்டி’ படம் மூலம் அறிமுகமானார். பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இன்றைக்கும் நண்பர்கள் தினம் என்றால் இதில் உள்ள ‘டாக்ஸி..டாக்ஸி’ பாடல் இளைஞர்களின் பேவரைட்..

இப்போது கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் ‘இந்திரஜித்’ என்கிற பேண்டஸியான கதையுடன் கோதாவில் குதித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் கௌதம் கார்த்திக் இந்தப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அர்ஷிதா ஷெட்டி நடித்துள்ளார்.

வில்லனாக சுதன்ஷு பாண்டே நடித்துள்ளார். இவர் ‘பில்லா-2’, ‘மீகாமன்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள அறிமுக இசையமைப்பாளர் ‘K.P’ என்பவர் வேறு யாருமல்ல, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் உதவியாளர்தான். இந்தப்படம் வரும் நவ-24ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

சமீபகாலமாக வெற்றிப்படங்களை தேர்ந்தெடுக்கும் சூட்சுமத்தை கண்டுகொண்ட கௌதம் கார்த்திக்கும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற உத்வேகத்துடன் கலாபிரவும் களம் இறங்கியிருப்பதால் இந்த இந்திரஜித்தும் நிச்சயம் இந்த இருவருக்கும் திருப்புமுனை படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.