மீண்டும் எழில் டைரக்சனில் விஷ்ணு விஷால்

ezhil-vishnu vishal

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்தது இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி.. இந்தப்படத்தின் காமெடி காட்சிகளுக்காகவே, படத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் ஏராளாம். அந்தவகையில் இந்த கூட்டணி மீண்டும் ஒரு காமெடி அதகளத்திற்கு தயாராகி உள்ளது..

ஆம்.. எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, காமெடி வேடங்களில் யோகிபாபுவும் மொட்ட ராஜேந்திரனும் கலக்க உள்ளார்கள். இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.