எடிட்டர் ஆண்டனிக்கு சதீஷ் விடுத்த மிரட்டல்..!

satheesh
சினிமாவை பொறுத்தவரை படத்தின் விறுவிறுப்பு கருதி, முக்கியம் என நினைத்து எடுக்கப்பட்ட சில காட்சிகளை கூட வேறுவழியின்றி வெட்டி தூக்கி எறிந்துவிடுவார்கள்.. டைரக்டரின் அனுமதியின் பேரில் தான் இது நடக்கும் என்றாலும் எடிட்டர் தான் தேவையில்லாத காட்சிகள் இவை என ஒரு பட்டியலை போட்டு இயக்குனரிடம் தந்திருப்பார்..

அந்தவகையில் முதலில் அடிவாங்குபவை நகைச்சுவை காட்சிகள் தான். அப்படித்தான் இரத்தின சிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘றெக்கை படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்த சில காட்சிகளை படத்தின் நீளம் கருதி எடிட்டர் ஆன்டணி தூக்கிவிட்டாராம்.

சமீபத்தில் நடைபெற்ற ‘றெக்க’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இதை குறிப்பிட்டு பேசிய சதீஷ், இதேமாதிரி ‘பைரவா’ படத்திலும் என் காட்சிகளை தூக்கியது தெரிந்தால் என் சாவுக்கு ஆண்டனிதான் காரணம் என லெட்டர் எழுதிவைத்து விட்டு சூசைட் பண்ணிக்குவேன்” என செல்லமாக மிரட்டலும் விடுத்தார்.