ஸ்டுடியோ கிரீன் தலைமையில் உருவான ‘ட்ரீம் பேக்டரி’..!


சினிமாவை பொறுத்தவரை இப்போது படம் எடுப்பது எளிது. ஆனால் அந்தப்படத்தை விற்பனை செய்வது, அதனை தியேட்டர்களில் நல்லபடியாக ஒடவைப்பது, படத்திற்கு சரியான பப்ளிசிட்டி செய்வது இதற்கெல்லாம் சரியான திட்டமிடலும் மார்கெட்டிங் திறமையும் வேண்டும்.

ஏற்கனவே படங்களை தயாரித்தும் நல்ல படங்களை வாங்கி வெளியிட்டும் முன்னனியில் இருந்துவரும் தயாரிப்பு நிறுவனமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தற்போது இந்த மார்க்கெட்டிங் முறையில் ஒரு புதிய முயற்சியாக தன்னுடன் இன்னும் ஐந்து தயாரிப்பாளர்களை தன்னுடன் சேர்த்து ‘ட்ரீம் பேக்டரி’ என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

இந்தக்கூட்டணியில் ஸ்டுடியோ கிரீனுடன், சி வி குமாரின் ‘திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட்ஸ்’, சஷிகாந்த்தின் ‘ஓய் நாட் ஸ்டுடியோ’, எல்ரெட் குமாரின் ‘ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட்’, அபினேஷின் ‘அபி&அபி’ மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் ‘லக்ஷ்மண் குமார்’ ஆகியோர் கூட்டணிக்கரம் கோர்த்துள்ளனர்.

தற்போது இந்த ‘ட்ரீம் பேக்டரி’ முதல் கட்டமாக ‘சரபம், ‘மெட்ராஸ்’, ‘யான்’, ‘காவியத்தலைவன்’, ‘லூசியா’ ஆகிய படங்களை கைப்பற்றியுள்ளது. இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிறுவனத்தின் கீழ இயங்க தொடங்கியிருப்பது தமிழ்சினிமாவில் இதுதான் முதல்முறை.. மேலும் இது ஆரோக்கியமான விஷயமும் கூட.