புதிய உலகில் அடியெடுத்து வைத்க்கும் தேவி ஸ்ரீபிரசாத்


பாடல்களை கேட்டதுமே துள்ளலுடன் கேட்பவர்களையும் ஆட்டம் போட வைக்கும் திறமைக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். தற்போது ரியாலிட்டி ஷோவில் நுழைந்துள்ளார். ஆம்.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல் ஞாயிறு தோறும் இரவு 07.30 – 09.30 வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத் மட்டுமல்ல அவருடன், பாடகர்கள் மனோ, ஸ்ரீனிவாஸ் இருவரும் நடுவர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.

‘சரிகமப’ மற்றும் ‘பேட்ட ராப்’ ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக ‘ராக்ஸ்டார்’ என்னும் பிரபலங்களுக்கான இசை ரியாலிடி நிகழ்ச்சியை இவ்வாண்டு வழங்கும். ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளில் மார்ச் 28 தொடங்கி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 0730 முதல் 0930 வரை ஒளிபரப்பாகும்.

கிகி மற்றும் ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சியில் ராகுல் நம்பியார், ரஞ்சித், பம்பா பாக்கியா, சத்தியன் மகாலிங்கம், பிரியா ஹிமேஷ், என்எஸ்கே ரம்யா, சின்னப் பொண்ணு, வினைதா, ஐஸ்வர்யா சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர்.

இது குறித்து ஜீ தமழ் தரப்பில் கூறுகையில், “போட்டியாளர்கள் அனைவரும் தொழில்முறைக் கலைஞர்கள் என்பதாலும், ஏற்கனவே ரசிகர்களைக் கொண்ட பிரபலங்கள் என்பதாலும், நிகழ்ச்சியின் நிறைவில் வெற்றியாளரோ, தோல்வியாளரோ இருக்க மாட்டார்கள். இணையற்ற திறமைகளைப் பெற்றுள்ள இக்கலைஞர்களுக்கு வித்தியாசமான சுற்றுகளில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்னும் பல புதிய உயரங்களுக்குச் செல்லும் ஒருவரைக் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்” என்கிறார்கள்.