ச்சீ..ச்சீ போ.. போ..” – ஜெய்யை துரத்தியடித்த ஆண்ட்ரியா..!

‘எங்கேயும் எப்போதும்’ ஹிட்டுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் சரவணன்-ஜெய் இருவரும் இணைந்துள்ள படம் தான் ‘வலியவன்’.. யார் வலியவன் என்பதற்கு தனது பாணியில் ஆக்ஷன் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் சரவணன். படத்தின் டீசரில் ஜெய்யை “ச்சீ..ச்சீ போ.. போ..” ஆண்ட்ரியா துரத்தியடிக்கும் காட்சி நிச்சயம் இளைஞர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.

இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாயகன் ஜெய் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருவரும் மிஸ்ஸிங். இமான் வராததற்கு காரணம் சொன்ன இயக்குனர் சரவணன், ஜெய் வராததற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினார். படத்தை பிப்ரவரி-14ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.