பிப்-2வில் போகன் ரிலீஸ் ; ஒருவாரம் முன்கூட்டியே வருகிறது

ஜெயம் ரவி , அரவிந்த் சாமி ஆகியோரின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் “போகன்”. இந்த படத்தை ரோமியோ ஜுலியட் பட இயக்குநர் லட்சுமணன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா, அக்‌ஷரா கவுடா, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பட்டையை கிளப்பியது. வரும் பிப்-9ல் போகன் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. இந்தநிலையில் சூர்யாவின் ‘சி-3’ படம் பிப்-9க்கு மாற்றப்பட்டதால் போகன் திரைப்படம் திட்டமிட்டதற்கு ஒருவாரம் முன்பாக பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது.