“5ஐ 2ஆக்கின மாதிரி 10ஐ 3ஆக்குங்க” ; போகன் இயக்குனருக்கு பிரபுதேவா கோரிக்கை

Bo
ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ படம் இன்று ரிலீசாகியுள்ளது.. ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.. இன்று படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை ‘போகன்’ படக்குழுவினர் சந்தித்தனர்..

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் லட்சுமண், “ஜெயம் ரவி, பிரபுதேவாவிடம் எனது இரண்டாவது படம் பற்றி சில கதைகள் சொன்னபோது அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றனர்.. அப்போதுதான் இந்த போகன் கதையை அவர்களிடம் சொன்னேன். இரண்டு பேருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டது.. ஆனால் நான் இந்த கதையை எனது ஐந்தாவது படமாக பண்ணலாம் என நினைத்திருக்கிறேன்.. அந்த அளவுக்கு பெரிய படம் என அவர்களிடம் சொன்னேன்…. அட சும்மா தைரியமா பண்ணுங்க பாஸ் என ஊக்கம் கொடுத்து இந்தப்படத்தை பண்ண வைத்தனர்” என இந்தப்படம் உருவான விதம் குறித்து கூறினார்.

அடுத்ததாக பேசிய பிரபுதேவா, “லட்சுமண் எந்த உலகத்துல இருக்கீங்க நீங்க..? இன்னைக்கு தேதிக்கு எது ஜெயிக்கிற கதைன்னு தெரியுதோ அதை உடனே பண்ணிரனும்.. நாலாவது அஞ்சாவதுன்னு எல்லாம் தள்ளிப்போட கூடாது.. இந்தப்படத்தை சூப்பரா பண்ணி கொடுத்திருக்கீங்க.. உங்க அஞ்சாவது படத்தோட கதையை ரெண்டாவது படமா இயக்குன மாதிரி, பத்தாவது படமா இயக்கலாம்னு ஏதாவது கதை வச்சிருந்தா, அடுத்து மூணாவது படமா எங்க கம்பெனிக்கே பண்ணுங்க” என ஒரு கோரிக்கையும் வைத்தார்..