அப்போ ‘டண்டணக்கா’.. இப்போ ‘டமாலு டுமீலு” ; போகன் கூட்டணி அதிரடி..!

bogan-damaalu-dumeelu
ஏதாவது புதிது புதிதாக பண்ணிக்கொண்டேதான் இருக்கிறார்கள் இயக்குனர் லட்சுமணும் இசையமைப்பாளர் இமானும்.. இதற்கு முன்னாள் தங்களது கூட்டணியில் உருவான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண்டணக்கா’ என்கிற பாடலை போட்டு ரசிகர்களுன் சேர்ந்து அந்த வார்த்தைக்கு அடையாளம் தந்த டி.ராஜேந்தரையும் உசுப்பேற்றினார்கள்.

இப்போது அதே ஜெயம் ரவி, ஹன்ஷிகா ஜோடியுடன் அரவிந்த்சாமியையும் உள்ளே நுழைத்து லட்சுமண் இயக்கிவரும் படம் போகன்.. இதிலும் இமான் தான் இசையமைக்கிறார். இப்போது இந்தப்படலத்திலும் ‘டண்டணக்கா’ போலவே, ‘டமாலு டுமீலு’ என்கிற அதிரடி பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.. ‘டண்டணக்கா’ பாடலை பாடிய அனிருத் தான் இந்தப்பாடலையும் பாடியுள்ளார்.