அருண்விஜய்-ஹரி கூட்டணியில் அடுத்தடுத்து இணையும் நட்சத்திரங்கள்


சினம் படத்தின் வேலைகளை முடித்துவிட்ட நடிகர் அருண்விஜய் தற்போது 2டி நிறுவனம் தயாரிப்பில் சரோவ் சண்முகம் என்பவர் இயக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவுடன் இணைந்து நடித்துவருகிறார். இன்னொரு பக்கம் அருண்விஜய்-இயக்குனர் ஹரி கூட்டணியின் பட வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது அருண்விஜய்யின் 33வது படமாகவும் ஹரியின் 16வது படமாகவும் உருவாகிறது.

இயக்குனர் ஹரி படம் என்றாலே நிறைய நட்சத்திரங்கள் இடம்பெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இந்தப்படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ராதிகா, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜூ, ஆடுகளம் ஜெயபாலன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.