தமிழில் ரீமேக் ஆகிறது ‘பெங்களூர் டேய்ஸ்’..!

மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படத்தை கேரள இளைஞர் கூட்டமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது..

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நஸ்ரியா.. இவர் தவிர ‘மரியான்’ பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் என இன்னும் மூன்று ஹீரோயின்களும் உண்டு. இப்போது இந்தப்படத்தின் வெற்றிதான் பிவிபி நிறுவனத்தை இந்தப்படத்தின் ‘அனைத்திந்திய ரீமேக் உரிமை’யை வாங்க வைத்திருக்கிறது.

குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளில் முதலில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம். தற்போதைக்கு துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா ஆகியோரின் கூட்டணி கதாபாத்திரங்களில் தமிழில் ஆர்யா, பரத், சமந்தா ஆகியோரை யோசித்து வைத்திருக்கிறார்களாம்.

தமிழிலும் தெலுங்கிலும் பாப்புலரான நடிகர்கள் கிடைத்தால் இருமொழிப்படமாக தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறதாம். பிவிபி நிறுவனத்துக்கு. அப்படி கிடைக்காத பட்சத்தில் இரண்டு மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து அந்தந்த மொழிகளில் தனித்தனியாக ரீமேக் செய்துகொள்ளும் ஐடியாவும் இருக்கிறதாம்.