டெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

ஜோடியாக நடித்து, காதலர்களாக மாறி, கணவன்-மனைவியாகவும் மாறிய ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘டெடி’ நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்டிக்டிக் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் 12 மார்ச் 2021 அன்று ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு படக்குழுவும் தங்களது படக்கதையை பட ரிலீஸ் வரை வெளியே தெரிந்துவிடாமல் பொத்திபொத்தி பாதுகாப்பார்கள். அனால் டெடி தயாரிப்பாளர்களோ அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் இதுதான் எங்கள் படத்தின் கதை என வெளியிட்டுள்ளனர். ஒருவேளை இதுகூட ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாமோ என்னவோ..

சரிசரி.. படத்தின் கதை இதுதான்.. ஸ்ரீவித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுலா பயணத்தின்போது துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தை சந்தித்து, ஒரு மருத்துவமனையில் தனியாக இருக்கிறார். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் சில கெட்ட குணம் கொண்ட மருத்துவர்கள், உதவியற்று, தனியாக இருக்கும் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கின்றனர்.

கரடி பொம்மையாக வாழும் பேச்சுதிறன் கொண்ட ‘டெடி’ ஸ்ரீவித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறது. ஆனால் அது தனியாக இதைச் செய்ய முடியாது என்பதை அறியும். ஒரு நாள், சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை “டெடி” காண்கிறது. மேலும் ஶ்ரீவித்யா விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி சிவாவிடம் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீவித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.

ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்த ‘டெடி’ படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.