ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஆர்யா!

ஆர்யா நடித்த, ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என இரண்டு படங்களும் நிற்காத ரேஸ் குதிரைகளாக ஓடிக்கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில் மூன்றாவது குதிரையாக இரண்டாம் உலகம்’ படமும் வரும் 22ஆம் தேதி ரேஸில் குதிக்கிறது. நிச்சயம் இந்தப்படத்தின் மூலம் ஆர்யா ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பது உறுதி என்கிறது பட யூனிட். காரணம் இந்தப்படத்தில் ஆர்யாவின் இரண்டுவிதமான தோற்றங்கள், அதற்காக அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பு எல்லாம் பிரமிக்கத்தக்கவை.

பி.வி.பி. சினிமா கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் இயக்கத்தில் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இந்தப்படம் இது தெலுங்கில் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. தனது கனவுப்படம் என்று சொல்லும் செல்வராகவன் இந்தப்படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா இருவருமே தங்களது திரையுலக வாழ்க்கையில் ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யா, ஜார்ஜியா மற்றும் பிரேசிலின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய படம் ‘இரண்டாம் உலகம் தான்’. படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் பின்னணி இசையும் இதர சில பாடல்களும் அனிருத்தின் கைவண்ணம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்தப்படம் உலகெங்கிலும் சேர்த்து மொத்தம் 1200 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு உணர்வை இந்தப்படம் தரும் என்கிறது பி.வி.பி நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>