ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்..!

anirudh - rajini film 2

சொல்லவே தேவையில்லை.. முன்னணி இசையமைப்பாளராக எப்போதோ வளர்ந்து விட்டார் அனிருத்.. அஜித், விஜய், சூர்யா என மும்மூர்த்திகளின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். ஆனாலும் அவரது இசைப்பயணம் என்கிற கிரீடம் இன்னும் கொஞ்சம் அழகுற வேண்டுமென்றால் அதற்கு மாணிக்க கல்லாக ஒன்றே ஒன்றுதான் வேண்டும்..

ஆம்.. சூப்பர்ஸ்டார் ரஜினி படத்திற்கு இசையமைத்தால் மட்டுமே அவருக்கு தனது லட்சியத்தை அடைந்ததாக திருப்தி ஏற்படும். என்னதான் ரஜினி அனிருத்துக்கு உறவினராக இருந்தாலும் தன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை காலம் தானாகவே அனிருத்தை தேடிச்சென்று கொடுக்கும் என நம்பினார் ரஜினி.

இதோ அந்த காலம் கனிந்து, இப்பொது ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகியுள்ளது.. ஆம்.. கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினி அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.

சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவார் அனிருத்.. ரஜினி படம்னா மொத்த வித்தையும் இறக்க மாட்டாரா என்ன..?