அனிருத்தாக மாறிய மகேஷ்பாபு…!

anirud movie

தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்களை டாக்டர் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, , யுவகிருஷ்ணா, மகேந்திர குலராஜா, எழில் வேந்தன். என ஏழு பாடலாசிரியர்கள் எழுதியுள்ளனர்.

வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு பணியை கவனிக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா படம் பற்றி கூறும்போது, “தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை ! என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை. முதன் முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப் படுத்துகிறோம். படத்தில் எல்லா நினைவுகளும் சந்தோஷமான நினைவுகளாக இருக்கும். அதனால் தான் பல துறைகளை சார்ந்த வல்லுனர்களை பாடல் எழுத வைத்தோம். டப்பிங் படம் என்பதை மீறி ஒரு நேரடி தமிழ் படமாக, ஒரு புது கலராக இருக்கும் இந்த ‘அனிருத்’ என்றார்.