அருண்விஜய் படத்தில் இணைந்த அம்மு அபிராமி


தமிழில் ராட்சசன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. அந்தப்படத்தில் கவனம் ஈர்த்த அம்மு, அடுத்ததாக அசுரன் படத்தில் பிளாஸ்பேக் காட்சிகளில் பதைபதைக்க வைத்து பரிதாபம் அள்ளினார். இந்தநிலையில் தற்போது அருண்விஜய்-ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அருண்விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்