இயக்குனரின் பொறுமைக்கு கிடைத்த பரிசு தான் ‘திமிரு புடிச்சவன்’..!

thimiru pudichavan pooja

விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது. “வழக்கத்தில் இருந்து மாறுபட்டு, இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கதையாக வடித்து இருக்கிறேன்” என்கிறார் இயக்குனர் கணேசா.

“இந்த கதையை எழுதும்போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் கதை சொன்னேன். இன்னும் சில காலம் போகட்டும் என்றார். இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தனக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்தை அடைந்து விட்டதை தொடர்ந்து மீண்டும் அவரிடம் சொன்னேன். இந்த முறை அவர் மறுக்கவில்லை”.

ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்குமாம். மார்ச் 1ஆம் தேதி துவங்க உள்ள இந்தப்படத்தின் இசை கோர்ப்பு பணிகள் தற்போது துவங்கி உள்ளது.