சீதக்காதி படத்தை பார்க்க சூர்யா ஆவல் – ஏன் தெரியுமா..?

surya wishes seethakathi

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் அடுத்ததாக ‘சீதக்காதி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். இந்தப்படம், அவரது கெட்டப் தொடர்பான புகைப்படங்களும் மேக்கிங் வீடியோக்களும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் இந்தப்படத்தில் எட்டு நிமிட காட்சி ஒன்றை சிங்கிள் டேக்கில் நடித்து விஜய்சேதுபதி அசத்தியுள்ளாராம். இந்த தகவல் நடிகர் சூர்யாவுக்கும் தெரியவர, ஆச்சர்யமான அவர், விஜய்சேதுபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இந்தப்படத்தை காண ஆவலாக இருப்பதாகவும் குறிபிட்டுள்ளார்.