“நான் பொம்பள பொறுக்கி தான்” – ‘தைரிய’ மாதவன்..!

maddy 1
மாதவனை தமிழ்சினிமா பக்கம் காணமுடியவில்லையே என ஏங்கிக்கொண்டு இருந்த அவரது இளம் ரசிகைகளுக்கு ஒரு நற்செய்தி… ஜன-29ஆம் தேதி அவர் நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படம் வெளியாக இருக்கிறது.. இதற்கான அறிவிப்பை இன்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவிலேயே அறிவித்து விட்டார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரியாக பாக்ஸிங் கோச் வேடத்தில் நடித்துள்ளார் மாதவன்.. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே அவர் ஒரு பெண்ணுடன் ஏடாகூடமான நிலையில் இருப்பது போன்ற காட்சி தெரிய, பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மாதவனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது..

“சார்.. பாக்ஸிங் கோச்.. திறமையனாவன்.. நேர்மையானவனா இருக்கலாம்.. ஆனால் அவனுக்கும் சில தனிப்பட்ட வீக்னெஸ் இருக்கலாம் இல்லையா.. இந்தப்படத்தில் நான் ஏற்று நடித்து இருக்கும் கோச் வேடம் பொம்பள பொறுக்கி கேரக்டர் தான்.. அதையும் தாண்டி அவனை எப்படி ஒரு பாக்ஸிங் பொண்ணு விரும்புறா அப்படிங்கிறதுதான் விஷயமே.. சத்தியமா அதுக்கும் மேல வேற எந்த காட்சியும் இல்ல சார்.. கிளீன் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க” என விளக்கம் அளித்தார்.

சில வருடங்களுக்கு முன் ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஒரிஜினல் பாக்ஸரான ரித்திகா தான் கதாநாயகியாக நடித்துள்ளார். சிவி.குமார் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் இருவரும் பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர், தயாரிப்பாளரான ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர் யுடுவி நிறுவனம் இதன் வெளியீட்டில் கைகோர்த்துள்ளது. காரணம் இந்தப்படம் தமிழ், இந்தி என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. இந்தியில் இதற்கு ‘சாலா காதூஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.