‘திருநாள்’ தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் ஜீவா..!

nenjamundu 1

போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து இன்று ஜீவா, நயன்தாரா நடித்த ‘திருநாள்’ படம் வெளியாகியுள்ளது… இந்த திருநாளிலே தான் நடிக்கும் இன்னொரு பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் ஜீவா. படத்தின் பெயர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’. ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர் பாடிய பிரபலமான பாடல் வரிதான் இது..

அதன்பின் ராமராஜன் நடித்த படத்திற்கு டைட்டிலாக மாறியது.. இப்போது ஜீவாவின் பட டைட்டிலாக மாறியுள்ளது.. கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பாக ‘திருநாள்’ படத்தை தயாரித்த செந்தில்குமார் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். படத்தை ஜே.எம்.அருண் என்பவர் இயக்குகிறார்.