சீனாவில் படமாக்கப்படும் பிரபுதேவாவின் குங்பூ சண்டைக்காட்சி

yang mung chung

இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நீண்ட நாட்களாக நடித்து வரும் திரைப்படம் ‘எங் மங் சங்’. இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிகை லக்ஷ்மி மேனன் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலருடன் ‘பாகுபலி’ பட வில்லன் பிரபாகர் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சீனாவில் மிகுந்த பொருட்செலவில் அரங்கு அமைத்து சண்டை காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்த படத்தில் குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறுவதால் கூடுதல் சிரமம் எடுத்து சண்டைக் காட்சிகளை சில்வா அமைத்துள்ளார்.