ரவுடிகளுக்கும் பேய்களுக்கும் இடையே சிக்கிய இளைஞர்கள் கதை படமாக வெளியாகிறது..!

பேய்ப்படங்களில் பேய்களுக்கு ப்ளாஸ்பேக் வைக்க மெனக்கெடுவது போல பேய்களிடம் மாட்டிக்கொள்பவர்களுக்கும் புதுதித்து புதிதாக காரணம் சொல்லியாக வேண்டும்.. அப்படி ஒரு புது காரணத்தோடு களம் இறங்கி இருக்கிறார்கள் ‘பேய் இருக்கா இல்லையா’ படக்குழுவினர்..

சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று மிகப் பெரிய தாதா ஒருவரின் தம்பியை அடித்து விடுகிறார்கள். கோபம் கொண்ட தாதா அந்த நால்வரையும் கொல்வதற்காக தேடிக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த அவர்கள் ஓடி ஒளியும் இடம் ஒரு பூத் பங்களா.அங்கு போன பிறகு தான் தெரிகிறது அது அமானுஷ்யமான பங்களா என்பது. உள்ளே பேய்களின் நடமாட்டம் வெளியே ரவுடிகளின் நடமாட்டம் உள்ளே இருந்தால் பேய் கொன்று விடும். வெளியே வந்தால் ரவுடிகள் கொன்று விடுவார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை காமெடி, திகில் கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.

இந்த படத்தில் அமர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், லிவிங்ஸ்டன், தாடிபாலாஜி, சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். பா.ரஞ்சித்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குனர் என்ன சொல்கிறார்..?

கடவுளை நேர்ல பார்த்தேன்னு சொன்ன நம்ப மறுக்கு நாம், பேயை பார்த்தேன்னு சொன்ன அப்படியான்னு உடனே நம்பிவிடுகிறோம். அப்படின்னா பேய் என்பது என்ன..? அது அமானுஷ்ய சக்தியா, வாழ்ந்தது இறந்தவர்களின் ஆத்மாவா அல்லது மனிதர்களின் மூட நம்பிக்கையா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்குமார்.