யோகிபாபு சைவத்துக்கு மாறியதன் பின்னணி..!

tharmaprabhu (1)

தற்போது முன்னணி காமெடி நடிகராக மாறிவிட்டார் யோகிபாபு அதனாலேயே அவரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கவும் பல இயக்குனர்கள் ரூம் போட்டு கதை எழுதி வருகிறார்கள் ஆனாலும் யோகிபாபு கொஞ்சம் புத்திசாலித்தனமாக ஹீரோவாக அல்லாமல், கதையின் நாயகனாக ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அதில் ஒன்றுதான் தர்ம பிரபு

முத்துக்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அசைவ உணவு சமைக்கவும். பரிமாறவும் கூடாது என முடிவு செய்துள்ளனர். காரணம் யோகி பாபு இந்த படத்தில் எமதர்மராஜாவாக நடித்து வருவது தான். அதனால் படக்குழுவினரும் படப்பிடிப்பு முடியும் வரை ஆன்மீகத்திற்கு மாறியுள்ளனர்

அதை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் முன்பாகவே கும்பகோணத்திற்கு அருகில் உள்ள எமதர்மராஜா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தி வந்துள்ளனர் மேலும் அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்துள்ளனர்.

இந்த ஆன்மிக செயல்முறை படம் வெற்றி பெற நேர்மையான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர். இந்த படத்திற்காக சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான தளம் ஒன்று சென்னையில் புகழ்பெற்ற ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ளது