‘கூர்க்கா’வாக மாறிய யோகிபாபு

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஒரு காமெடி நடிகர் உருவாவது வாடிக்கை தான்.. அந்தவகையில் சந்தானம், சூரியை தொடர்ந்து தற்போது தனது தனித்துவ நகைச்சுவையால் முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வருபவர் யோகி பாபு.

தற்போது விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’ என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ள இவர் தற்போது ‘கூர்க்கா’ என்னும் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

படத்திலும் யோகிபாபுவே கூர்க்கா வேடத்தில் நடிக்கிறார். வெளிநாட்டவர் ஒருவருக்கும், நாய்க்கும் இடையே நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் கதையானது அமைக்கப்பட்டுள்ளது. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இத்திரைப்படத்தினை இயக்குகிறார்.