“ஆமாம்.. இது தழுவல் தான்” ; பலூன் இயக்குனரின் ஓபன் டாக்..!

ஜெய், அஞ்சலி நடிப்பில், வரும் டிச-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பலூன். சினிஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சினிஷ் இந்தப்படம் உருவாக்கம் குறித்த சில தகவல்களை நேர்மையாக பகிர்ந்துகொண்டார்.

“நான் வேறு ஒரு கதை தயார்செய்து வைத்திருந்த நிலையில், ஒருமுறை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை சந்தித்தபோது, ஹாரர் படத்திற்கு கதை ரெடி பண்ணுங்கள் என கூறினார். திடீரென எப்படி ஹாரர் கதை ரெடி பண்ணுவது என யோசித்தாலும் பல ஹாலிவுட் பட டிவிடிக்களை பார்த்து பார்த்து அலசி, அவற்றில் இருந்து புதிதாக ஒரு லைன் பிடித்து இந்தக்கதையை உருவாக்கினேன்..

இதை நானே பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.. ஒரு சிலரைப்போல் ஒரு பழைய ஹிட் படத்தை காப்பி அடித்து எடுத்துவிட்டு, நான் அந்தப்படத்தை பார்க்கவே இல்லை என்றெல்லாம் பொய்சொல்ல மாட்டேன்” என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் இயக்குனர் சினிஷ்.