கனல் கண்ணன் மாஸ்டரையே அதிரவைத்த அறிமுக ஹீரோ..!

yaarivan 2

இன்றைய தேதியில் பணம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால் அப்படி வரும் ஹீரோக்களில் எத்தனை பேர் நிலைத்து நிற்கிறார்கள் என்பதுதான் கேள்வியே. ஆனால் எத்தனை பெரிய கொதேஎஸ்வ்ரராக இருந்தாலும் நடிப்பை முழு மூச்சாக சுவாசிக்கும் ஒரு சிலர் வெற்றிக்கோட்டை தொடும் நிகழ்வுகளும் நடப்பது உண்டு..

அந்த நம்பிக்கை தான் ‘யார் இவன்’ படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள சச்சினை பார்க்கும்போது தெரிகிறது.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குகொண்ட சச்சினை சாதாரண தோற்றத்தில் பார்ப்பதற்கும், ட்ரெய்லரில் ஒரு ஹீரோவாக பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை காண முடிந்தது.

இவர் மிகப்பெரிய பிசினஸ்மேன் என்றாலும் சினிமாவில் உள்ள ஆர்வத்தால் இந்தியில் மூன்று படங்களில் நடித்துவிட்டு இப்போது தமிழுக்கு வந்துள்ளாராம். இவர் எந்த பிசினஸில் பிசியானவர் என்பதை இந்தப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைத்திருக்கும் கனல் கண்ணன் மாஸ்டர் கூறியுள்ளார்.

“ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை படமாக்கினோம்.. அன்று திட்டமிட்டபடி முழுதும் எடுக்க முடியாததால் அடுத்தநாள் கொஞ்சம் படமாக்கவேண்டி இருந்தது… ஆனால் படஹ்தின் நாயகன் சச்சினோ, சான்ஸே இல்லை.. மறுநாள் நான் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிசினஸ் மீட்டிங்கில் கலந்துகொண்டாக வேண்டும்” என கூறி மாஸ்டரையே அதிரவைத்தாரம்.

கபடியை பின்னணியாக கொண்டு த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை இயக்குனர் டி.சத்யா இயக்கியுள்ளார்.. இவர் படகோட்டி பட இயக்குனரான டி.எஸ்.பிரகாஸ்ராவின் பேரன் ஆவார்.. தெலுங்கு சினிமாவின் ரீமேக் ராஜா என்பதுபோல, தமிழில் ஹிட்டான வெண்ணிலா கபடி குழு, மௌனகுரு உட்பட மூன்று படங்களை ரீமேக் செய்த இவர் தமிழில் எந்த ரீமேக்கும் இல்லாமல் நேரடியாக இயக்கி இருக்கும் படம் தான் இந்த ‘யார் இவன்’.. வரும் மேமாதம் இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.