கோச்சடையான் பேரலையிலும் தாக்குப்பிடித்த எக்ஸ்-மென்..!

நேற்று சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ வெளியாவதை தொடர்ந்து மற்ற தமிழ்ப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் ரேஸில் இருந்து ஒதுங்கிக்கொண்டன. ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கை உந்தித்தள்ள  நேற்று ஹாலிவுட் படமான X -மென் days of the future past படத்தை மட்டும் ஆங்கிலம் மற்றும் தமிழில் ரிலீஸ் செய்தார்கள்.

அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை.. கோச்சடையானைப்போலவே இந்தப்படத்திற்கும் தக்க மரியாதையை அளித்திருக்கிறார்கள் ரசிகர்கள். தமிழில் வெளியான தியேட்டர்களில் 70 சதவீதமும் ஆங்கிலத்தில் வெளியான தியேட்டர்களில் 100 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்ததே அதற்கு சாட்சி.

ஒரு மிகப்பெரிய மாஸ் ஹீரோவின் படம் வெளியான நேரத்தில் நெல்லுக்குப் பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும் என்பது போல பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டிவரும் X-மென்னின் தைரியமும் வசூல் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.