குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்த த்ரிஷா .

trisha (1)

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நடிகை திரிஷா விழிப்புணர்வு பேரணிநாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்வோம் என UNICEF நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார். அங்குள்ள பூங்காவில் துவங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, தங்களது கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய நடிகை திரிஷா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, கொத்தடிமை முறையை தடுத்து நிறுத்தி , குழந்தைகளுக்கான கல்வி தரும் இயக்கமாக யுனிசெப் (UNICEF) விளங்கி வருவதாகவும், தெரிவித்தார்