இருமொழி படத்தில் நடிக்கிறாரா..? ; கார்த்தி தரப்பில் விளக்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி நடித்து முடித்திருக்கிறார் இந்த நிலையில் ‘நீடி நாடி ஒகே கதா’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய ரவி உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமல்ல, கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே. சொல்லி விட்டதாகவும் செய்தி வெளியானது. இதை கார்த்தி தரப்பு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அவர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘ரவு உடுகுலா’ இயக்கத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி. அப்படி ஒரு படத்தில் கார்த்தி நடிக்கவில்லை.. சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ‘கார்த்தி 17′ என்ற அடுத்த படத்தில் முழுவீச்சில் அவர் நடிப்பார்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.