‘அருந்ததி’ வாய்ப்பை நழுவவிட்டது ஏன்..? ; மம்தா மோகன்தாஸ்..!

கடந்த 2௦௦9ல் வெளியான அருந்ததி படத்திற்கு இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அவ்வளவு மவுசு இருக்கிறது.. அனுஷ்கா நடித்த இந்தப்படம், அனுஷ்காவின் முழுத்திறமையை வெளிக்கொண்டு வந்ததுடன் அவரை முன்னணி நடிகையாக உச்சாணிக்கொம்பிலும் ஏற்றிவிட்டது.

ஆனால் இந்தப்படத்தில் அருந்ததியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் நடிகை மம்தா மோகன்தாஸுக்குத்தான் போனதாம்.

இதுபற்றி சமீபத்தில் கூறியுள்ள அவர், “சினிமாவில் அப்போது எனக்கு அதீத ஆர்வம் இல்லை.. நான் நடிக்க வந்த முதல் நான்கு வருடங்களில் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தேன். அதனால் ஏதோ படங்களில் நடித்து வந்தேனே தவிர, மிகப்பெரிய ஈடுபாடு காட்டவில்லை. அதனால் தான் ‘அருந்ததி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்த போது கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது” என மனம் திறந்து கூறியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.